Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையான முதல் ஒரு நாள் போட்டி இந்தியா அபார வெற்றி. தமிழக வீரர் சாய் சுதர்சன் சாதனை

0

'- Advertisement -

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதில் அதிகபட்சமாக டோனி டி ஜோர்ஜி 28 ரன்களும், ஆண்டிலே 33 ரன்களும் மட்டுமே எடுத்தனர்.

இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர். 117 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னில் விக்கெட்டைஇழந்தார்.

இதைத்தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். பின்னர் சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் விளாசினார்கள். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்த அடுத்த சில நிமிடங்களில் 52ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார்.

Suresh

இறுதியாக இந்திய அணி 16 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 9 பவுண்டரிகளுடன்  55 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுக போட்டியிலேயே அரை சதம் அடித்து சாதனை புரிந்தார். அறிமுக போட்டியிலே அரை சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் ஆனார் சாய் சுதர்சன்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.