திருச்சி ரயில்வே பனிமலையில் எஸ் ஆர் எம் யூ வீரசேகரன் தலைமையில் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் .
திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில்
எஸ். ஆர்.எம்.யு. பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்.
திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் உள்ள வேலைகளை செய்வதற்கு அவுட்சோர்சிங் மூலமாக தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டது. இந்த முடிவினை ரயில்வே நிர்வாகம் கைவிடவேண்டுமென வலியுறுத்தி,
அங்கு பணிபுரியும் 4000 பணியாளர்கள் இன்று காலை திடீரென பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு. துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் நுழைவு வாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.
அப்போது தனியார் மையம் முடிவை கைவிட வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு மற்றும் மத்திய அரசுக்கும்
எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் வீரசேகரன் கூறும்போது,
ரயில்வேயில் அவுட்டோர் சோர்சிங் முறையை கையாளும்போது அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான எஸ் ஆர் எம் யு உடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் சர்பிலஸ் சரண்டர் செய்து திருச்சி ரயில்வே பணிமனையில் வீல் ஷாப் பிரிவில் நூறு ஒப்பந்த பணியாளர்களை ஒரே நேரத்தில் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த முடிவை கைவிடாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும் 2004 முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் , ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்பட்டி ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும்,
ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பிறகும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது . இந்தப் போராட்ட அறிவிப்பு ஆணை நேற்றைய தினமே திருச்சி பொன்மனை ரயில்வே பணிமனையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இதனால் பொன்மலை பனிமலை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.