சாக்சீடு-புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி இணைந்து உலக மாற்றுதிறனாளிகள் தின விழாவை கொண்டாடியது.
நிகழ்ச்சியின் முதலில் குத்துவிளக்கேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் புனித சிலுலவை கல்லூரியின் முதல்வர் முனைவர்.
இசபெல்லா ராஜகுமாரி தலைமை வகித்தார்.சாக்சீடு இயக்குனர்.
.பரிமளா வரவேற்புரையாற்றினார்.
புனித சிலுவை கல்லுரி புனர்வாழ்வியல் துறை தலைவர்.டுரின் மார்டினா மாற்று திறனாளி குழந்தைகளின் பொற்றோர் தங்களது குழந்தைகளை கையாளும் முறை பற்றியும் அவர்கள் திறமைகளை ஊக்குவிக்கும் செயல்கள் பற்றியும் சிறப்புறை யாற்றினார்.
மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பவுலின் சோபியா சிறப்பு குழந்தைகளின் அவசியம் குறித்தும். சமூகத்தில் அக்குழந்தைகளுக்கு கிடைக்க வேணடிய உரிமைகள் குறித்தும் தனது உரையில் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சமூக பணியில் மாற்று திறனாளிகள் நலனுக்காக பணி செய்யும் 8 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சாதனையாளர் விருதுகளை சாக்சீடு இயக்குனர் வழங்கினார்.
தமிழக அரசின் சார்பில் நடை பெறும் கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சா.அய்யம்பாளையம் மே.நி.பள்ளி சிறப்பு திறன் மாணவன் Y.சஞ்சய் என்பருக்கும் சாதனையார் விருதை வழங்கி கௌரவித்தது சாக்சீடு நிறுவனம்.
மாற்றுத்திறன் மாணவ-மாணவியர் 100 பேருக்கு சான்றிதழும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நாளுக்கான முக்கியத்துவம் குறித்த உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
சி.சசி நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சி தொகுப்பை ரெனில்டா, லாரன்ஸ் மற்றும் சி.சசி வழங்கினார்கள்.