Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் .

0

'- Advertisement -

கடந்த வாரம் மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர்,உணவு, பால் போன்ற அத்தியாவசிய உணவு இன்றி தவித்து வருகின்றனர் .

 

மக்களின் துயர்நீக்க திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என வலியுறுத்தி இருந்தார் .

அதன் அடிப்படையில் அதிமுக தொண்டர்கள் அளித்த அரிசி, குடிநீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேகரித்து இன்று தில்லைநகர் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் .

இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார்,மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் ,

 

பகுதி
செயலாளர்கள் எம் ஆர் ஆர் முஸ்தபா, மலைக்கோட்டை அன்பழகன் , ஏர்போர்ட் விஜி, கலைவாணன், மற்றும் தொழிலதிபர் இப்ராம்ஷா , வழக்கறிஞர் முல்லை சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன் , ரோஜர் , சதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.