Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மிக்ஜாம் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க 14 அமைச்சர்களை நியமித்த தமிழக முதல்வர்.

0

'- Advertisement -

 

மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கையாக மழை பாதிப்பு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தி கண்காணிக்க, 14 அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

அதன்படி, சென்னை மண்டலத்துக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் காஞ்சிபுரத்துக்கு அமைச்சர் சு. முத்துசாமி,

தாம்பரத்துக்கு அமைச்சர் ர.சக்கரபாணி,

ஆவடிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,

கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூருக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,

வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு,
சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கத்துக்கு அமைச்சர் சி.வெ. கணேசன்,

திருவள்ளூருக்கு அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.