ஜீயபுரம் அருகே
விஸ்வநாத ஸ்வாமி கோவில் உண்டியல் பணம் திருட்டு.
திருச்சி ஜீயபுரம் அருகே பளூர் பகுதியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாத ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் செயல் அலுவலராக அகிலா இருந்து வருகிறார்.
வழக்கம்போல் அந்திகால பூஜை முடிந்து அர்ச்சகர் கௌரிசங்கர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு கோவிலுக்கு வந்தார்.அப்போது கோவிலின் முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலும் உடைக்கப்பட்டு கிடந்தது.
மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பின்னர் உண்டியலை உடைத்து அதிலிருந்து பணம் காசுகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அகிலா ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
உண்டியலில் ரூ.4000 வரை பணம் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.