Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர் அருகே வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி. தம்பதியினர் மீது வழக்கு பதிவு

0

'- Advertisement -

திருவெறும்பூர் அருகே
மகனுக்கு வேலை வாங்கி தருவதாக முதியவரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி
தம்பதி மீது வழக்கு பதிவு.

திருச்சி துவாக்குடி வடக்கு மலை பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 64) இவரது மகன் அஜித்குமார் ( 24 ). இவர் பிஇ பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார்.
இதனை அறிந்த திருச்சி காட்டூர் அம்மன் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த பானு மீனா அவரது கணவர் குப்புசாமி ஆகியோர் அன்பரசை நேரில் அணுகினர்.
பின்னர் அவர்கள் தாங்கள் இருவரும் திருச்சி தில்லை நகர் பகுதியில் தனியார் டெக்னாலஜிஸ் நிறுவனம் நடத்தி வருவதாக அறிமுகம் செய்தனர். மேலும் தங்களுக்கு விஐபிகள் பலருடன் தொடர்பு, உள்ளதாகவும் உங்கள் மகனுக்கு ரூபாய் மூன்றரை லட்சம் கொடுத்தால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் குமாஸ்தா பணி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
இதை நம்பிய அன்பரசு5 தவணையாக அந்த தம்பதி கேட்ட ரூ. மூன்றரை லட்சம் பணத்தையும் கொடுத்தார்.
ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பரசு காட்டூரில் உள்ள பானு மீனா வீட்டுக்குச் சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவன் மனைவி இருவரும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் அதைத் தொடர்ந்து அன்பரசு  போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் திருவெறும்பூர்  போலீசார்
பானு மீனா மற்றும் அவரது கணவர் குப்புசாமி ஆகிய இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.