இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் போலி ரசீது மூலம் பல லட்சம் ஊழல் . கோர்ட் உத்தரவை மதிக்காத அலுவலர்கள் .
திருச்சி பெரிய கடை வீதி சொர்ண பைரவர் வகையறா கோவில்கள்,
சத்திரம் பேருந்து நிலையம் காமாட்சி அம்மன் ,
மேலபுலிவார்ரோடு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
பாலக்கரை செல்வ விநாயகர், திருக்கோயில், இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில் புத்தூர் திரௌபதி அம்மன் திருக்கோயில், உறையூர் வெளிகண்ட நாதர் , பாளையம் பஜார் முருகன் கோயில், உறையூர் செல்லாயி அம்மன் கோயில் , வெள்ளாளர் தெருவில் உள்ள மாரியம்மன் ஆகிய கோயில்களில் பணியாற்றிய இந்து சமய அறநிலை துறை செயல் அலுவலர்கள் அய்யம்மாள், நித்யா இவர்கள் இக் கோயில்களில் செயல் அலுவலராக பணியாற்றிய காலங்களில் போலி ரசீது புத்தகம் மூலம் பல லட்ச ரூபாய் முறைகேடில் ஈடுபட்டுள்ளனர் .
காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கோபுர கலசம் காணாமல் போனது பற்றி இதுவரை எந்த ஒரு நீதி விசாரணையும் முறையாக நடத்தப்படவில்லை .
மேற்கண்ட திருக்கோயிலில் நித்திய பூஜைக்கு எதுவும் வழங்கப்படவில்லை.( நெய்வேத்தியம், அன்னதானம் )
கோவிலுக்கு வரும் உபயோதாரர்கள் தரும் பணம், பொருட்களைக் கொண்டு நெய்வேத்தியம், அன்னதானம் மேற்கொண்டு உள்ளார் .
திருக்கோயில்களில் பூஜை. அன்னதானம் போன்றவற்றுக்கு தேவையான பொருட்களை கூட்டுறவில் தான் வாங்க வேண்டும் சட்டம் இருந்தும் இவர்கள் போலியாக பில் தயார் செய்து பல லட்ச ரூபாய் ஊழலில் ஈடுபட்டு உள்ளனர் .
சொர்ண பைரவர் திருக்கோயிலில் பூஜை பொருட்களை ஏலம் விடாமல் விலைப்பட்டியலும் இல்லாமல் திருக்கோயில் சார்பாக அர்ச்சனை. அபிஷேக ரசீது வழங்காமல் பணம் பெற்றுக் கொண்டு இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
பாலக்கரை செல்வ விநாயகர் கோயிலில் நித்யா என்பவர் செயல் அலுவலராக பணியாற்றிய காலத்தில் பாழடைந்த கட்டிடங்களை புரணைப்பு பணிக்கு உத்தரவிட்டும் என்னானது என தெரியவில்லை , இவர் கோவிலில் போலியாக ஊழியர்களை நியமித்து பல லட்சம் பார்த்தது தனி கதை. இதே கோயிலில் வைப்புத் தொகை எதுவும் இல்லாமல் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கோயில் பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் கிளை யான மதுரை கோர்ட்டில் இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் நிறுவன தலைவரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வழக்கு பதிவு செய்ததன் கீழ் கோர்ட் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தது . இந்த விசாரணைக்கு இந்து சமய அறநிலையத் துறையை சேர்ந்த எந்த அலுவலர்களும் ஆஜராகவில்லை. இது கோர்ட் அவமதிப்பு செயலாகும் .
அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது .
கடந்த மாதம் சென்னை ஹைகோர்ட்டில் இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி சார்பில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராகவன் ஆஜராகி வக்காலத்து மனு தாக்கல் செய்து உள்ளார் .
இந்த போலி ரசீது பற்றி விசாரணை நடத்திய மண்டல தணிக்கை அலுவலர் முருகன் இந்த பல லட்ச ரூபாய் முறைகேடில் முக்கிய குற்றவாளி என இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தெரிவித்துள்ளார்.