Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டிடிவி தினகரனின் தலைமை பண்பு, செயலாற்று முறை குறித்து திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் செந்தில் நாதனின் புகழாரம்.

0

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டிடிவி தினகரனின் தலைமை பண்பு, செயலாற்றல் பற்றி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும்,
மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் புகழாரம்…..

“ஆண் சிங்கங்களும், 6 வருடங்களாக பாதையை தொலைத்த விட்டில் பூச்சிகளும்.”

எந்த ஒரு நாட்டிலும், ஏன்? அண்ட வெளியில் வேறு ஏதாவது கிரகத்தில் நாடுகள் இருந்தாலும், அங்கும் வசிக்கும் பெண்கள், Personality அதாவது ஆளுமையான ஆண் சொந்தங்களையே விரும்புவர்.

தனது தந்தை, சகோதரன் அல்லது கணவரை பற்றி, வாழ்கின்ற சமுதாயத்தில் இருக்கும் அபிப்பிராயமே அவர்களது வாழ்கையை முழுமையாக ஆக்கும்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு விலங்குகள் குடும்பத்திலும், ஆளுமையான துணையையே விரும்புவர்.

அதிலும் ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, தன் துணை எவ்வாறு தீரமிக்க “ஆண்மகனாக”, அப்பிரச்சினையை, இச்சமுதாயத்தில் எதிர்கொள்கிறார் என்பதில் தான் (வெளியில் காட்டிக் கொள்ள விட்டாலும்) அவர்களது பெருமையும் கர்வமும் இருக்கும்.

மேற்கத்திய நாடுகளில் ஆண்மகனாகப்பட்டவர் 7 வகையாக பிரிக்கின்றனர். ஆல்பா (Alpha) மனிதன் எனப்படுபவரே, முதல் வரிசையில் அறியப்படுகிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் காடுகளில் வசிக்கும் சிங்கம், காட்டில் வசிக்கும் உயிரினங்களில் Alpha என்று உதாரணப்படுத்தப்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கை, போர்குணம், விடாமுயற்சி, எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமை, மற்றும் ஸ்திரத்தன்மையை உடையவரே இவ்வகை ஆல்பா வகையினர்.

தான் சார்ந்திருக்கும் கூட்டத்திற்கு தலைமை ஏற்று அல்லது தலைமை இடும் கட்டளையை செயல்படுத்தி, தன்னையும், தனது கூட்டத்திற்கு பெருமை சேர்ப்பவரே ஆண் மகனாக கருதப்படுகிறார்.

எத்தனை இடர்பாடு, தொல்லைகள் வந்தாலும், கொண்ட நிலை மாறாது, எடுத்த காரியம் பின்வாங்காது, முழு ஈடுபாட்டுடன், கடின முயற்சிகளை மேற்கொள்ளும் ஆண்மகனேயே எவ்வகை பெண்டீரும் விரும்புவர், என சங்க காலம் தொட்டு இக்காலம் வரை அனைத்து கவிகளும் போற்றினர்.

“நற்றிணையில்” ஒரு தலைவி தனது ஊரை “இது எனது ஊர்” என்று குறிப்பிடாமல் “வீரம் பொருந்திய தனது தந்தையின் ஊர்” என்று குறிப்பிடுகிறார்.

“புறநானூறு” பாடியவர்களுள், பொன்முடியார் என்னும் ஒரு பெண் புலவர், ஒரு தாய்க்கு ஆண் குழந்தையை பெறுவதில் அல்ல, அந்த குழந்தையை வீரன் ஆக்குவதே மகிழ்ச்சி என்கிகிறார்.

“ஓக்கூர் மாசாத்தியார்” என்ற பெண்பாற் புலவர், “பழந்தமிழ் மறத்தி ஒருத்தி நாட்டைக் காக்கத் தந்தையைப் போர்க் களத்திற்கு அனுப்பினாள். அவன் வீரச் சாவடைந்தான். நேற்றுக் கணவனைக் களத்திற்கு அனுப்பினாள். அவனும் களம்பட்டான். ஆனாலும் அவள் கலங்கவில்லை.இன்றும் போர்ப் பறை கேட்டுத் தன் மகனை – ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள்” என தமிழ்மண் சிறப்பை குறிப்பிடுகின்றார்.

இவ்வகை மாண்பை பெற்ற மரபணுக்களைக் கொண்ட, வீரச்சமூகத்தில் இருந்து வந்த நாம், இன்று தலைமை பண்புக்கு இலக்கணம் சேர்க்கும், கண்ணியம் சேர்க்கும், பெருமை சேர்க்கும், இம்மண்ணின் பெருமைமிகு தங்கதமிழ்மகன், மக்கள்செல்வர் அவர்களின் தலைமை ஏற்று பயணம் செய்தலே போதும்.

மக்கள்செல்வரின் பிள்ளைகள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள், கொண்ட கொள்கையையில் மாறாது நிற்பவர்கள், தற்கால சூழலில் சுயமரியாதைக்கு அடையாளமாக இருப்பவர்கள், என்று இந்நாட்டிலே, நம்மைப் பற்றிய அபிப்பிராயமே, நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும், நமது வழித்தோன்றலுக்கும் நாம் சேர்த்த, சேர்க்கும் பெருமை.

திடீர் வெளிச்சத்தை பார்த்து ஏமாந்து போய், அதன் மேல் விழுந்து மடியும், வீட்டில் பூச்சிகளை பற்றி சற்றும் பொருட்படுத்தாத,

மக்கள்செல்வரின் எண்ணங்களை நிறைவேற்ற காத்திருக்கும் எண்ணற்ற மறத்தமிழர்களில் ஒருவன்:

மக்கள்செல்வரால் நான்.
மக்கள்செல்வருக்காகவே நான்

என செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.