பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியூ சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் சி ஐ டி யு மாநகர் மாவட்ட
சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசு நவம்பர் மாதம் 7ஆம் தேதி அன்று வெளியிட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுக்க வேண்டும், ஆர்டிஓ, காவல் துறை மாமுலை கட்டுப்படுத்த வேண்டும், 2019 மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும், இணையவழி சேவையை உடனடியாக துவங்க வேண்டும். மேக்சிகேப் மற்றும் (எஸ்யூவி ) வாகனங்களுக்கு பழையகாலாண்டு வரி விதிப்பு முறையை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சிஐடியூ திருச்சி மாநகர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். இதில் சங்க மாவட்ட பொருளாளர் சுரேஷ், வரிசை முகமது, சுப்பிரமணி, ஆண்டனி சுரேஷ், பீர்முகமது உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.