Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் காவல்துறையினரை தாக்கிய பிரபல ரவுடி ஜெகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.

0

 

திருச்சி – பெரம்பலூர் சாலையில் உள்ள சனமங்கலம் வனபகுதியில் ரவுடி ஜெகன் என்பவர் சுட்டு கொலை. மேலும் இவர் மீது ஏற்கெனவே 11 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறபடுகிறது.

இன்னும் சற்று நேரத்தில் ரவுடி ஜெகனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்,வயது (30). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மே 19ஆம் தேதி அன்று ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக இவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். இந்நிலையில் அனைவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் கொம்பன் என்கின்ற ஜெகனை காவல் துறையினர் பிடிக்க முயன்ற பொழுது காவல் துறையினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற ஜெகனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகன் மீது பல்வேறு கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

11 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஜெகனை காவல்துறையினர் பிடிக்க சென்ற போது காவல்துறையினரை ஜெகன் தாக்கிதால் என்கவுன்டர் செய்யப்பட்டார். ரவுடி ஜெகனை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை, ஜெகன் தாக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்கவுண்டர் நடைபெற்ற இடத்தை மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு மேற்கொண்ட பின் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த உதவி ஆய்வாளர் வினோத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.