Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2003ல் கங்குலி சிந்திய கண்ணீருக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுப்பாரா?

0

 

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டிக்கும் 2003ல் நடந்த உலகக் கோப்பை பைனல் போட்டிக்கும் இடையில் முக்கியமான தொடர்பு ஒன்று உள்ளது.யாரும் எதிர்பார்க்காத விதமாக 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா – இந்தியா இடையே இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இந்த சீசனில் தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா எதிரான போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. அப்போது புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா கீழே இருந்தது. கடைசி அணியாக புள்ளி பட்டியலில் இருந்தது. அப்போதே பலரும் இது ஆஸ்திரேலியா அணியே இல்லை. ஆஸ்திரேலியா அணி மிக மோசமாக ஆடி வருகிறது.

அந்த அணியிடம் விளையாடும் ஸ்பிரிட் கொஞ்சம் கூட இல்லை. மோசமான நிலைக்கு ஆஸ்திரேலியா சென்றுவிட்டது. இந்த சீசனில் அவர்கள் கண்டிப்பாக மோசமாக தோல்வி அடைவார்கள் என்று கணித்து இருந்தனர். ஆனால் அந்த கணிப்புக்கு எல்லாம் ஆஸ்திரேலியா முற்றுப்புள்ளி வைத்தது. இந்த தோல்வியை தொடர்ந்து நடந்த 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா வரிசையாக வென்றது.

ஆப்கானிஸ்தான் வெற்றி: அதிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றிக்காக போராடியது எல்லாம் அந்த அணியின் உண்மையான போராட்ட குணத்தை அப்படியே வெளிக்காட்டியது.

அந்த மேட்சில் கால்கள் வலிக்க.. உயிரை பேட்டில் பிடித்துக்கொண்டு.. போராடி ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்தார் மேக்ஸ்வெல். பொதுவாக இப்படி எல்லாம் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று பொதுவாக சொல்லப்படும் ஒரு ஆட்டத்தில்.. ஆப்கானிஸ்தான் கையில் இருந்த வெற்றியை தட்டிப்பறித்து ஆஸ்திரேலியாவின் செமி பைனல் சீட்டை உறுதி செய்தார். இப்போது ஆஸ்திரேலியா பைனல் வர.. அன்று மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டமும் முக்கியமான காரணம் ஆகும்.

ஆஸ்திரேலியா கதை முடிஞ்சது பாஸ்.. ஆப்கானிஸ்தான் உண்மையிலேயே செமி பைனலுக்கு வரப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்த நிலையில்.. நாங்க ஆஸ்திரேலியாடா.. மைட்டி ஆஸ்திரேலியா என்பதை ஆஸ்திரேலியா நிரூபித்தது. ஆஸ்திரேலியா பொதுவாகவே டாப் ஆர்டர் சரிந்தாலும் கூட மிடில் ஆர்டர் சிறப்பாக ஆடி வெல்லும். மிடில் ஆர்டர் சரிந்தாலும்.. டெயில் எண்டர்கள் ஆட்டத்தை மாற்றி ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைப்பார்கள். பழைய ஆஸ்திரேலியா அணி அப்படிதான் ஆடும். இந்த சீசனில் அதுதான் இதுவரை மிஸ் ஆனது. அதே பழைய ஆட்டத்தை கண் முன் நிறுத்தி மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்தார்.

பைனல்; செமி பைனலுக்கு முன் அவர் கொடுத்த உத்வேகம் செமி பைகளிலும் ஆஸ்திரேலியாவிற்கு உதவி உள்ளது. அதே உத்வேகத்தின் மூலம் நேற்று செமி பைனல் ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்கா அணியை துவம்சம் செய்து ஆஸ்திரேலியா அணி பைனலுக்கு வந்துள்ளது.

உலகக் கோப்பை பைனலில் இந்தியாவை ஆஸ்திரேலியா எதிர்கொள்ள உள்ளது. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டிக்கும் 2003ல் நடந்த உலகக் கோப்பை பைனல் போட்டிக்கும் இடையில் முக்கியமான தொடர்பு ஒன்று உள்ளது.

அதன்படி 2003 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியா மோதின. அதில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் பைனலுக்கு வந்தது. அது ஆஸ்திரேலியா அணி. இன்னொரு பக்கம் இந்தியாவை பைனலில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

அதேபோல் 2023ல் இந்தியா ஒரு போட்டியில் தோல்வி அடையாமல் பைனலுக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் பைனலில் யார் வெற்றிபெறுவார்கள்..

அன்று கங்குலி சிந்திய கண்ணீருக்கு ரோஹித் இன்று பதிலடி கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2019 உலகக் கோப்பையில் செமி பைனலில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்ததற்கு இந்தியா 2023ல் பதிலடி கொடுத்தது போல.. 2003ல் ஏற்பட்ட காயத்திற்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.