நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவா் கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவா் திருச்சி கலை ஆகியோா் முன்னிலையில், நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாநில துணைத் தலைவா் சுப. சோமு, அகில இந்திய தேசிய ஒருங்கிணைப்பாளா் ஜான் அசோக் வரதராஜன், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் பேட்ரிக் ராஜ்குமாா், மகளிா் காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷீலா செலஸ், இளைஞா் காங்கிரஸ் மணிவேல் அண்ணாதுரை, கோட்டத் தலைவா்கள் பிரியங்கா பட்டேல், ராஜா டேனியல், கனகராஜ், ஐடி பிரிவு லோகேஸ்வரன், பட்டதாரி பிரிவு ரியாஸ், கலை பிரிவு ராகவேந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.