Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இரு சக்கர வாகனத்தில் விவீங் செய்து வெடி வெடித்த வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது.

0

 

இருசக்கர வாகனங்களில் வீலிங், அதிவேக பயணம் என பல்வேறு சாகசங்களை செய்து, அதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக, சமூகவலைதளங்கள் இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்காணித்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தீபாவளியை ஒட்டி நம்பர் பிளேட் இல்லாத பைக்கில், ஹெல்மெட் மாட்டிய இளைஞர்கள் பட்டாசு வெடித்துக்கொண்டே வீலிங் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பைக்கின் முன்பு வான வேடிக்கை பட்டாசுகளை கட்டிக்கொண்டு, மக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்யப்பட்டது. டெவில் ரைடர்ஸ்’ என்ற இன்ஸ்டா அக்கவுன்டில் வீடியோ பகிரப்பட்டது. ‘பைக் விலாகிங்’ என்ற பெயரில் சாலையில் அத்துமீறும் இளைஞர்களால் மக்களை அச்சமடைந்தனர்.

சாகசம் என்ற பெயரில் தங்களது உயிருக்கு மட்டுமல்லாமல், சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. எனவே இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், திருச்சியில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த இளைஞர்களை போலீசார் கண்டறிந்தனர். பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என கண்டுபிடிக்கப்பட்டது, வீடியோ எடுத்தது, திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே சாலையில் வாகன விதிமிறலீல் சிக்கி டிடிஎஃப் வாசன் கைதானது நினைவுகூரத்தக்கது.

நாடு முழுவதும் கொண்டாப்படும் ஒருசில பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. பொதுவாகவே பட்டாசு வெடுப்பதில் பொது இடங்களில் இடையூறு இல்லாமல் வெடிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், சிலர், இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக தீபாவளியை கொண்டாடுவது போல இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.