அதிகமுறை ட்ரேன்ஸ்பர் ஆன எட்டையபுரம் கலக்கல் எஸ்.ஐ. செய்த காரியம் என்ன தெரியுமா?
இவர் பெயர் திலீபன், இவர் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேர்மை மட்டுமே இவரது ப்ளஸ் பாயிண்ட்,
இவர் வேலைக்கு சேர்ந்து மிகக்குறைந்த சர்வீஸ் காலத்தில் மிக அதிகமான இட மாறுதல்களை பெற்றவர் இதுவைரை இவர் பெற்ற இட மாறுதல்கள்.
அவினாசி – 6 மாதங்கள்
சேர்ந்த மங்களம் – 18 நாட்கள்
செங்கோட்டை – 22 நாட்கள்
இடைநீக்கம் (சஸ்பெண்சன்) – 33 நாட்கள்
கோவில்பட்டி (மேற்கு) – 58 நாட்கள்
தூத்துக்குடி(மத்திய) – 1 நாள்
தாளமுத்துநகர் – 93 நாட்கள்
தூத்துக்குடி(மத்திய) – 136 நாட்கள்
திருச்செந்தூர் – 253 நாட்கள்
தற்போது எட்டையபுரத்தில் பணிபுரிகிறார், இவர் சேர்ந்தமங்களத்தில் பணியில் சேர்ந்தபோதில் இருந்து கடைபிடித்துவரும் நேர்மையும் கண்டிப்புமே அதிகாரிகளின் எரிச்சலுக்கு காரணமாகி பல முறை இடமாறுதல் பெற்றதற்கு காரணம் என தகவல்கள் வருகின்றன .
இவர் செங்கோட்டையை விட்டு மாற்றப்பட்ட போது செங்கோட்டையில் கேக் வெட்டி , வெடி வெடித்து கொண்டாட்டங்களை சிலர் நிகழ்த்தியது இவர் நேர்மையும், கண்டிப்பும் புரியும்
தற்போது இவர் செய்தது என்னவெனில், பல காவல் நிலையங்களில் திருடு போய் கண்டுபிடித்த நகைகளில் பாதிக்கும் குறைவாக வழங்கும் பல அதிகாரிகளுக்கு மத்தியில் நேற்று எட்டையபுரம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் ஓட்டுனர் மரணமடைய அவருடன் வந்தவர்கள் படுகாயமடைந்தனர் தகவலறிந்து சென்ற திலீபன் அதிர்ச்சியிலும் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்த 100 சவரன் நகை ( மதிப்பு சுமார் 20 லட்சத்திற்கும் மேல் ) மற்றும் 7 ஆயிரம் பணத்தை கைப்பற்றி மறு நாள் விபத்தில் இறந்தவரின் மருமகனை அழைத்து ஒப்படைத்துள்ளார் ஒரு குண்டுமணி குறையாமல்.
இவரது நேர்மையை அனைவரும் பாராட்டுவோம்.