அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் நேருஜி நகர் அருகில் நடைபெற்றது.

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளர் ச.கல்யாணசுந்தரம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் மற்றும் தலைமை கழக பேச்சாளர் டி.கே.துரைசாமி ஆகியோர் ஆற்றிய சிறப்புரையில்:
பொன்விழா கண்ட கழகத்தின் வரலாற்றினையும், இன்றைய விடியா திமுக அரசின் அவல நிலையினையும் மக்கள் விரோத போக்கினையும், தொகுதிக்கு சற்றும் பயனில்லாத திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்றனர்.