Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விரைவில் சென்னையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

0

பத்து ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை விரைவில் சென்னையில் போராட்டம் : திருச்சியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர் சங்க கூட்டத்தில் முடிவு.

தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று அவன் மாநிலத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

புதிய தொழில்நுட்பத்தை வேளாண் துறையில் தொகுத்து வேளாண் உற்பத்தியை பெருக்குவது இத்திட்டத்தின் நோக்கமாக மத்திய அரசின் நிதி உதவி உடன் தமிழகத்தில் ஆத்மா என்ற பெயரில் இத்திட்டம்
( AGRICULTURE TECHNOLOGY MANAGEMENT AGENCY – ATMA)
செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 385 வட்டார அளவில் 3 அலுவலர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டு அவர்கள் கிராமங்கள் வாரியாக விவசாயிகளுக்கு புதிய வேளாண் தொழில்நுட்பத்தை எடுத்துக் கூறி வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கு பணியமர்த்தப்பட்டனர்.

தமிழக அளவில் சுமார் 1200 அலுவலர்கள் பணியாற்று வரும் நிலையில் இவர்களுக்கு மத்திய அரசின் கீழ் வருடம் தோறும் 10% ஊதிய உயர்வுடன் நிதி உதவி தமிழக அரசிடம் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் மத்திய அரசு 90 சதவீத பங்களிப்பும் மாநில அரசு 10% பங்களிப்பும் என இருந்த நிலையில் தற்போது மத்திய மாநில அரசுகள் தலா 50 சதவீதம் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இத்திட்டத்தில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக அலுவலர்களில் சரி பாதியாக பெண்களும் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக தமிழக அரசு ஊதிய உயர்வு அளிக்கவில்லை எனவும், குறிப்பாக அரசு அறிவித்துள்ள பெண் அலுவலர்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படவில்லை, மாதத்திற்கு ஒரு நாள் விடுமுறையும் அளிக்கப்படவில்லை இது குறித்து பலமுறை கடந்த ஆட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும் கோரிக்கை விடுத்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை இந்நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திருச்சியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.