சென்னையில் ஆசிரியர்கள் கைது கண்டித்து திருச்சியில் டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
சென்னையில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரிய பெருமக்களை கைது செய்ததை கண்டித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியும்,
அவர்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வர் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும்,
நேற்று மாலை 5 மணி அளவில்
எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்ற திருச்சி உறையூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி பாண்டமங்கலம் தெற்கு வாயில்
முன்பு டிட்டோஜாக் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் சே நீலகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநகர தலைவர்
ஹக்கீம் அலி
மாநகரச் செயலாளர் பெர்ஜித் ராஜன்
முன்னாள் மாநகர செயலாளர்
அமல் சேசுராஜ்
முன்னாள் மாநகரப் பொருளாளர்
வேத நாராயணன்
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பவுல்ராஜ் மற்றும்
தமிழக ஆசிரியர் கூட்டணி நகரத் தலைவர்
ஜீவானந்தம்,
செயலாளர்
நிஷார் அஹமது
பொருளாளர்
காட்வின் பிரசன்னா உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் முழக்கமிட்டனர்.