Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட, வட்டார ஆலோசனை கூட்டத்தில் சென்னை ஆர்ப்பாட்டத்தில் 1000-கும் மேற்பட்டோர் பங்கேற்க முடிவு.

0

 

திருச்சி மாவட்டத்திலிருந்து சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 1000 ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு.

வருகிற அக்டோபர் 13 ஆம் தேதி சென்னை டி பி ஐ- DPI ( பள்ளிக்கல்வித்துறை வளாகம்) வளாகத்தில்
டிட் டோஜாக் மாநில அமைப்பு சார்பாக 30 அம்ச கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 1000 மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பதென புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் .
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஒ.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று நடைபெறக்கூடிய எண்ணும் எழுத்து பயிற்சி வகுப்புகளில்
தேநீர் மற்றும் உணவு இடைவெளியின் போது துண்டு பிரசுரங்களை வழங்கி ஆசிரியர்களை ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு தயார் படுத்த வேண்டும் எனவும்,
வட்டார அளவிலான பொறுப்பாளர்கள் கூட்டத்தை
நடத்தி ஆயத்தப்படுத்தி பெருந்திரளான ஆசிரிய பெருமக்களை சென்னை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் எனவும், முடிவு செய்யப்பட்டுள்ளது..

இக்கூட்டத்தில் டிடோஜாக்
மாவட்ட ஒருங்கிணைப் பாளரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மாநில பொருளாளருமான சே நீலகண்டன்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்
கோ நாகராஜன்,
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்
லா அந்தோணி எட்வட்ராஜ்,
ஜே எஸ் ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ப சரவணன் உள்ளிட்ட 25 -க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை வழங்கினர்.

நிறைவாக தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பெ.iராஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.