Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆரூரான் சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் உறுதி என்ற பெயரில் புதிய சிமெண்ட் அறிமுகம் விழா.

0

 

ஆரூரான் சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் உறுதி என்ற பெயரில் புதியதாக PORTLAND (Fly Ash Based) சிமெண்ட் அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரெங்கராஜன் பாபு, சேர்மன் காமராஜ் ஐ.ஏ.எஸ்., ஆகியோர் புதிய ரக சிமெண்டை அறிமுகப்படுத்தி அதன் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கி பேசினர்.

விற்பனை பிரிவு மேலாளர்கள் ராமசுப்பு, ராஜராஜன் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விற்பனையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அறிமுக நிகழ்ச்சியின் முடிவில் அக்கவுண்ட்ஸ் மேலாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.