Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் பூ வியாபாரிக்கு கத்திக்குத்து. அதிமுக பிரமுகர் படையப்பா ரங்கராஜ் கைது.

0

'- Advertisement -

திருச்சி திருவானைக்காவல் சிங்கபெருமாள் கோவில்தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 37). இவர் ஸ்ரீரங்கம் மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

Ad banner

இந்த நிலையில் நேற்று அதிகாலை மாணிக்கம் பிள்ளை தெரு அருகே கதிர்வேல் சென்றபோது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவரை சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

இதில் அவருக்கு கையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த கதிர்வேலை அப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் படையப்பா ரங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். (இவர் இவர் அதிமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது)
சுரேஷ், செல்வகுமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.