திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் ரூ.33.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த 2 பெண்களிடம் விசாரணை.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.33.70 லட்சம் தங்கம் பறிமுதல்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்தும், துபையிலிருந்தும்
திருச்சி விமான நிலையத்துக்கு விமானங்கள் வந்தடைந்தன. அவற்றில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில் ஒரு பெண் தனது, ட்ராலி “பேக்கின்” (பெட்டியில்) மின்சாரவயர் வடிவில் தயாரிக்கப்பட்ட தங்கத்தை மறைத்தும், மற்றொரு பெண் கொண்டு வந்திருந்த உள்ளாடைகளுக்குள் மறைத்தும் மொத்தம் 646 கிராம் தங்கத்தை மறைத்து,கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் மதிப்பு ரூ.33.70 லட்சமாகும். தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.