காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பயன்கள் வழங்க வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அனைத்து ஓய்வுதியர்கள் சங்க 3ம் மாநில பேரவை கூட்டத்தில் தீர்மானம்
ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பயன்கள் வழங்கி வேண்டும்
பேரவை கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க 3-ஆம் மாநில பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.
பேரவை கூட்டத்திற்கு மாநிலதலைவர் ச.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கௌரவத்தலைவர் மு.பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
டிஎன்ஜிஇஏ மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் துவக்கவுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் பா.ரவி வேலை அறிக்கையை வாசித்தார். மாநில பொருளாளர் மு.மகாலிங்கம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மாவட்ட கருவூல அலுவலர் க.பாபு, டிஎன்ஜிபிஏ மாநிலபொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, டிஎன்ஆர்டிஎஸ்ஓஏ மாநில தலைவர் அ.கென்னடிபூபாலராயன், டிஎன்ஆர்டிஓஏ மாநில பொதுச்செயலாளர் ச.பாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின்படி 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.
பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஊரக வளர்ச்சி இயக்குனர் மாவட்ட ஆட்சியர்களால் விசாரணை அலுவலர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். விசாரணை செய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும்.
ஓய்வு பெற உள்ளோர் மீது தனி கவனம் செலுத்தி தணிக்கை தடைகளை முடித்து ஓய்வு முன்மொழிவுகளை உரிய காலத்தில் அனுப்ப வேண்டும்.
விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மீது கால வரையறை நிர்ணயம் செய்து விரைந்து தீர்வு காண வேண்டும்,
ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பயன்கள் அனுமதிக்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி தொகையினை ரூ 3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்
என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டிஎன்ஜிபிஏ மாநிலத்தலைவர் என்.எல்.சீதரன் நிறைவுரையாற்றினார்.
முன்னதாக
வரவேற்புக்குழு தலைவர் எம்.வி.செந்தமிழ்செல்வன் வரவேற்றார்.
முடிவில் வரவேற்புக்குழு செயலாளர் டி.வி.மனோகரன் நன்றி கூறினார்.