Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரசு மாதிரி பள்ளிகளில் பயின்று திருச்சி என் ஐ டி யில் தேர்வாகியுள்ள 35 மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மடிக்கணினி வழங்கினார்.

0

'- Advertisement -

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரசு பள்ளிகள் மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளில் பயின்று திருச்சி என்.ஐ.டி’யில் தேர்வாகியுள்ள 35 மாணவ மாணவிகளை சந்தித்து மடிக்கணினி வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் என்.ஐ.டி.இயக்குநர் அகிலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கலந்துகொண்டார்கள்.

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாதிரிப் பள்ளிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் பயின்ற மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்தது. இதன் பயனாக தமிழ்நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 274 அரசுப் பள்ளி மாணவர்கள் தலைசிறந்த முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகினர்.
அவர்களின் 35 மாணவர்கள் திருச்சி என்.ஐ.டி நிறுவனத்தில் தேர்வாகினர். அவர்களை சந்தித்த அமைச்சர் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கி, இனிமேலும் ஏதெனும் உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் பள்ளிக் கல்வி அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், மாதிரிப் பள்ளியில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர கருத்துகள் உள்ளதா? எனவும் கேட்டறிந்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.