திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை, பணம் அபேஸ்.
தேனி மாவட்டம் செட்டிப்பட்டி குருசாமி தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் இவரது மனைவி சுமதி (வயது 40).
சம்பவத்தன்று இவர் திருச்சி வந்தார். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தனது வேலையை முடித்துக் கொண்டு மத்திய பேருந்துநிலையம் செல்லும் பேருந்தில் ஏறி வந்து இறங்கினார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் தனது பேக்கில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 3,500 பணம் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அவரது பையை திறந்து நகை பணத்தை அபேஸ் செய்து விட்டனர்.
இது குறித்து சுமதி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.