Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சாலை ஓரம் மோதிய அரசு பேருந்து. உடல்நிலை சரியில்லை என 3 நட்களாக விடுப்பு கேட்டும் தர மறுத்ததால் இந்த விபத்து.

0

 

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை காட்டுப்பட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 55). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தீரன் நகர் பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று காலை திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையம் வழியாக புங்கனூர் வரை செல்லும் பஸ்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 18 பயணிகள் இருந்தனர்.பஸ் திருச்சி பாரதியார் ரோட்டில் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது, திடீரென்று கணபதிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதைப்பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். இதற்கிடையில் கணபதி தன்னால் முடிந்த அளவுக்கு பஸ்சை சாலையின் ஓரத்தில் நிறுத்த முயன்றார். நெஞ்சுவலியால் அவதிப்பட்ட போதிலும் தனது சாதுர்யமான செயலால் சாலையோரத்தில் உள்ள டெலிபோன் கம்பத்தில் மோதி பஸ்சை நிறுத்தினார்.

இதனால் பஸ்சில் இருந்த 18 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

மேலும் அந்த சமயத்தில் சாலையோரத்தில் யாரும் இல்லாததால் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

இவர் கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் விடுமுறை கேட்டு உள்ளார் ஆனால் டிப்போவில் ஆள் இல்லை என்பதால் ஆள் வந்தவுடன் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர் எனக் கூறப்படுகிறது இதனால் தான் இந்த விபத்தும் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.