Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆகாஷ் பைஜுவின் ANTHE 2023 தேசிய திறன் தேடல் தேர்வு.

0

 

ஆகாஷ் பைஜுவின் ANTHE 2023: தேசியதிறன் தேடல் தேர்வு.


தேர்வுக்கு தயாரிப்பதற்கான சேவைகள் துறையில் நாடளவில் முதன்மை வகிக்கும் ஆகாஷ் பைஜு, மிக பிரபலமான ANTHE தேர்வின் 14-வது பதிப்பு (ஆகாஷ் நேஷனல் டேலன்ட் ஹண்ட்எக்ஸாம் -2023) நடைபெற விருப்பதை அறிவித்திருக்கிறது.

100% வரை ஸ்காலர்ஷிப்களையும் மற்றும் சிறப்பான ரொக்க விருதுகளையும் பெறும் வாய்ப்புடன் தங்களது திறனை VII-XII –ம் வகுப்பு மாணவர்கள் வெளிப்படுத்த இந்த வருடாந்திர ஸ்காலர்ஷிப் தேர்வு வாய்ப்பினை வழங்குகிறது.

மருத்துவம் அல்லது பொறியியலில் நம்பிக்கையளிக்கும் எதிர்காலத்தின் கனவுகளை நனவாக்குவதற்காக இளம் மாணவர்களுக்கு திறனளிக்கும் ANTHE 2023 வெற்றிக்கான சிறப்பான நுழைவாயிலாக நிச்சயம் இருக்கும்.

ANTHE ஸ்காலர் ஷிப்பை வெல்பவர்கள், ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து NEET, JEE, மாநில CETs, பள்ளி/போர்டு தேர்வுகள் உட்பட, பல்வேறு தேர்வுகளுக்கு தயாரிக்கவும் மற்றும் NTSE மற்றும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டித்திறனுள
ஸ்காலர் ஷிப்களுக்கு தகுதி பெறவும் நிபுணத்துவ வழிகாட்டலையும், ஆலோசனையையும் பெறலாம்.

பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த குழு மாணவர்களுக்கு 5 நாட்கள் நடைபெறுகின்ற தேசிய அறிவியல் சாகச பயணத்தில் இடம் பெறும் வாய்ப்பும் இந்த ஆண்டு மாணவர்களுக்காக வழங்கப்படுவது கூடுதல் சிறப்பம்சமாகும். இதற்கான அனைத்து செலவுகள் ஆகாஷ் நிறுவனத்தால் ஏற்கப்படும்.

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) – ன் தலைமை செயல் அலுவலர் அபிஷேக் மகேஷ்வரி, ANTHE 2023 குறித்து கூறியதாவது: கனவுகள் மற்றும் சாதிக்கும் திறன்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதன் மூலம் இலட்சக்கணக்கான மாணவர்களின் பேரார்வங்களை பூர்த்தி செய்யும் வினையூக்கியாக ANTHE இருந்து வருகிறது.

2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே அமைவிட ரீதியிலான தடைகளை உடைத்து, நாடெங்கிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கு எமது கோச்சிங் (பயிற்சி) வாய்ப்புகளை வழங்குவதற்கு நாங்கள் கடுமையாக முயற்சித்திருக்கிறோம். அவர்கள் யாராக இருப்பினும், அவர்களது சொந்த வேகத்தில் NEET மற்றும் IIT-JEE தேர்வுகளுக்கு தயார் செய்ய மாணவர்களுக்கான வாய்ப்புகளை ANTHE திறந்து வைக்கிறது.

ANTHE 2023 நிகழ்வில், மாணவர்களின் மிக அதிக பங்கேற்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். சிறப்பான எதிர்காலத்திற்கு நெருக்கமாக மாணவர்களை கொண்டு செல்லும் எமது செயல் திட்டத்தில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.” என கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.