Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலைப்பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 30ம்ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

0

திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 30-வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் மிகவும் சீரும் சிறப்புடன் நடைபெற்றது.

விளையாட்டு விழாவிற்கு பொன்மலைப்பட்டி திருஇருதய மேல்நிலைப்பள்ளி தாளாளரும் தலைமை ஆசிரியருமான அருட்தந்தை பிரான்சி சேவியர் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி விளையாட்டு விழாவினை மலர்தூவி துவக்கி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று சிறப்புரையாற்றினார் .

விழாவினை சிறப்பு செய்யும் வகையில் சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவரும்,48 வது வார்டு கவுன்சிலருமான கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், மற்றும் 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

விளையாட்டு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளியின் முதல்வர் கவிதா வரவேற்றார். முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

 

நடைபெற்ற விளையாட்டு விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு
கலர் பந்து எடுத்தல், உப்பு மூட்டை தூக்குதல்,
கல் பொறுக்குதல், பலூன் உடைத்தல், பின்னோக்கி நடத்தல், ரெடி டு ஸ்கூல், தடை தாண்டுதல், சிலம்பம், விளையாட்டு, யோகா, கிளாப் யோகா,வளையத்தில் நுழைதல்,மியூசிக்கல் சேர், பெற்றோர்களுக்கான லக்கி கார்னர், ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் பரிசாக வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அனைவருக்கும் ஊக்க பரிசாக மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ் பொற்கிழி வழங்கி பாராட்டி பள்ளியின் செயல்பாடுகள் , மாணவ-மாணவிகளின் திறமை, பள்ளி வளர்ச்சியில் ஆசிரியர்களின் சிறப்பு பள்ளி தாளாளரின் அயராத கல்வி பணியினை பாராட்டி பேசினார்.

விழாவிற்கு தலைமை ஏற்ற அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் சிறு குழந்தைகளின் நடனம், அவர்ளுக்கு விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தை தெரிந்து கொண்டு ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று பேசினார். விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து சிறந்த முறையில் நடத்திய பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோரை பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் வெகுவாக பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.