Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாஜகவுடன் கூட்டணி.திருச்சியில் நடைபெற்ற அமமுக ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன்.

0

'- Advertisement -

 

திருச்சி மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமமுக நிறுவன தலைவர் டிடிவி தினகரன் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் இந்த இயக்கத்தை வழிநடத்துவது தொண்டா்கள் தான். திமுகவை விட மோசமான தீயசக்தி எடப்பாடி பழனிசாமி. துரோகம் செய்யும் கும்பல் தான் பழனிசாமியுடன் உள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரி இறைத்து நமது நிா்வாகிகளை விலைபேசி அவா்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றனா். நம்மைவிட்டு போனவா்கள் எப்படி இருக்கிறாா்கள் என்பது தெரியும். அமமுகவில் 23 அணிகள் உள்ளன. அனைத்து அணிகளிலும் நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

விரைவில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தொடங்கும். திமுக, பாஜக மீதுள்ள பயத்தால் காங்கிரஸ் கட்சியை கழட்டி விட வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் காங்கிரஸ் கட்சியுடன் நாம் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. மற்றொரு வாய்ப்பு பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என்று நினைத்து பாஜவுடன் கூட்டணி சேரும் வாய்ப்பும் உள்ளது.

அல்லது தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம். இது தோதலுக்கான கூட்டணியே தவிர கொள்கைக்கான கூட்டணி அல்ல. அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை இருந்தால் நாட்டில் ஒரே கட்சி தானே இருக்க முடியும் என்றாா் டிடிவி.

இக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளா் ரங்கசாமி, தலைமை நிலைய செயலாளா் ம.ராஜசேகரன், அமைப்புச் செயலாளா் சாருபாலா, திருச்சி மாநகா் மாவட்ட செயலாளா் செந்தில்நாதன், தெற்கு மாவட்ட செயலாளா் கலைச்செல்வன், பகுதி செயலாளர் சங்கர் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.