Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா விஜயகுமாருக்கு கலெக்டர் பாராட்டு சான்று.

0

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு சுதந்திர தினவிழாவில்‌‌ பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்!

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். உலக சமாதானத்தை உணர்த்தும் வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டு மூவர்ண பலூன்களின் தொகுப்பை பறக்க விட்டார்.திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருடன் திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் காவல்துறையினர் அரசு அலுவலர்கள் மற்றும் சமூக சேவை புரிந்த தனி நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
திருச்சியில் மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிறோம்.
மரணமானது துயரத்தின் உச்சம் ஆகும்.
இறந்தவரின் உடலை அவரின் சொந்த இருப்பிடத்துக்கோ, வீட்டுக்கோ, நெருக்கமானவர்களிருக்கும் ஊருக்கோ உறவினர்க்கோ தகவல் கொடுக்க முடியாமல் அமரர் அறையில் உரிமை கோரப்படாத உடல்கள் ஏராளம் உள்ளன. இப்படி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம். மரணம் ஒன்று தான். சம்பவங்கள் பல. இதன் வலியும் வேதனையும் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. விபத்தில் பலியாகி மூட்டையாய் வந்ததும் உண்டு. ஆற்று மதகில் ஊறிய நிலையில் கிடந்த உடலும் உண்டு. பிச்சை எடுத்து ஜீவனம் நடத்திய இருபாலரும் பேருந்து நிறுத்தத்திலோ, சாலை ஓரத்திலோ இறந்தவர்களும் உண்டு. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு சென்றவர்களும் உண்டு.
உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் வறுமை மாறாமல் தொடா்கிறது.
கொடிது கொடிது வறுமை கொடிது
வறுமையின் விளைவை களப் பணியால் அறிந்து அதற்குண்டான அணுகு முறை கொள்கையுடன் தினசரி உணவகங்களில் உபரியாகும் உணவினை பெற்று வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் ஆண்டு தோறும் உணவளித்து வருகிறோம்.
வறுமையை உணா்வுப்பூா்வமாக கள ஆய்வில் கண்டுள்ளோம். ‘ஏழ்மையான பொருளாதாரத்தாலோ
முதுமை மற்றும் நோயின் அடிப்படையில்
காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு சாலையோரங்களிலேயே உண்டு உறங்கி கையேந்தி பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி மருத்துவ சிகிச்சை இன்றி உடல் நலம் குன்றி குற்றுயிராக உருக்குலைந்து அழுக்கு படிந்த உடல், ஏக்கம் நிறைந்த கண்கள், கறை படிந்த பற்கள், கிழிந்த உடையுடன் சாலை ஓரங்களிலேயே இறந்து போய் விடுகிறார்கள். இவர்கள் போதிய பண வசதி இல்லாமல் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருவது எங்களது ஆய்வில் தெரிகிறது. உற்றார் உறவினர் சகோதர சகோதரிகள் உதாசீனத்தால் உறவின்றி பொது மக்களிடம் கையேந்தி வாழ்க்கையினை நடத்துகின்றனர்.
பல ஏளனத்திற்கு ஆளானவர்கள் படும் கோபம், வேதனை, துக்கம், துயரத்தால் இவர்கள் நிம்மதியாக தூங்கவோ, வேலை செய்யவோ அல்லது சாப்பிடவோ முடிவதில்லை. இவர்களது வேதனைக்கு முக்கியக் காரணியாய் அமைவது உடல்நலக் குறைவும் முதுமையும் தான். மிகவும் ஏழ்மையான வா்க்கத்தைச் சோ்ந்தவர்கள். சாப்பிடுவதை குறைத்தும், ஒரு வேளை சாப்பிடுவதை முற்றிலும் தவிா்த்தும் உள்ளனா். இதனால் இவா்களின் மகிழ்ச்சியும் காற்றோடு கலந்து விடுகிறது.
இப்படி வறுமையில் வாழும் அவா்களின் துன்பங்களும் துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். எப்படி இருப்பினும் இன்னும் வறுமை தீா்ந்தபாடில்லை. தொடர்கிறது.
ஆதரவற்ற அனாதை பிரேத நல்லடக்க பணியினை மனைவி, மகளுடன் செய்யும் போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப் பணியாக நான் கருதுகிறேன். இவர்களுக்கு மரியாதை செய்ய ஆளில்லை மலர்மாலை அணிவிக்க யாருமில்லை இறுதி ஊர்வலத்திற்கு யாருமில்லை. பிரேதத்திற்கு வாய்க்கு அரிசி போட ஆளில்லை.
நாங்கள் சுயநலம் பார்க்காமல் பொதுநலன் சார்ந்ததாகவே இறுதி சடங்கினை செய்கிறோம்.
இருபத்தைந்திற்கு மேல் குருதிக்கொடை அளித்துள்ளேன். வாழ்நாளிற்கு பிறகு எனது உடலினை தானமாக வழங்க உறுதியேற்று மனைவி மகள் ஒப்புதலுடன் திருச்சி கி. ஆ. பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்துள்ளேன்
என்றார்.மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் மகள் கீர்த்தனா விஜயகுமார் இருவரும் விடுமுறை நாட்களில் இயன்ற அளவு உரிமை கோரப்படாத உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள் என்றார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்
ஆதரவற்ற அனாதை பிறகும் நல்லடக்க உதவிக்கு யோகா ஆசிரியர் விஜயகுமார் 9842412247

Leave A Reply

Your email address will not be published.