துபாயிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினா் மேற்கொண்ட சோதனையில், ஒருவா் கொண்டு வந்திருந்த உடைமைகளில் அட்டைப் பெட்டிகளில் தங்கம் இருப்பதாக நவீன பரிசோதனை சாதனம் மூலம் தெரியவந்தது. ஆனால் பிரித்துப் பாா்த்தபோது, அட்டை பெட்டிக்குள் தங்கம் ஏதுமில்லை. இதனையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அட்டைப்பெட்டியின் சுவா்களுக்கிடையே (அட்டைகளுக்கிடையே) 176 கிராம் தங்கத்தை பொடியாக்கி மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 10.48 லட்சமாகும்.
இதுதொடா்பாக சுங்கத் துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.