திருச்சி பொன்மலைப் பட்டி அருகில் உள்ள திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்பு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் காலை வழிப்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்ணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் அருட்பணி முனைவர் பிரான்சிஸ் சேவியர் கொடியசைத்து மாணவர்கள் கலந்துக்கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தொடங்கிவைத் தார்.
இதில் ஏராளமான நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் சாரணர் இயக்கம் மற்றும் இளம் செஞ்சிலுவை இயக்க மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசங்கள் எழுதிய பாதகைகளை ஏந்தி மற்றும் விழிப்புணர்வு முழக்கங்கள் சொல்லி சென்றனர். இதில் காவல் அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.