
திருச்சி கிழக்கு மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கனிஅமுதன் தலைமையில் மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி, கருர் மண்டல செயலாளர் தமிழாதன். தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் மண்டல செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகி அரசு. முன்னாள் மாவட்ட பொருளாளர் சந்தனமொழி மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள நலத்திட்ட உதவிகள் மற்றும் பிறந்தநாள் அன்று மேற்கொள்ளப்பட இருக்கின்ற செயல் திட்டங்களை பற்றி ஆலோசனை நடைபெற்றது.