Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இதனால்… பிஎஸ்என்எல் நிலைதான் நாளை தபால் துறைக்கும் ஏற்படும்.திருச்சி மநீம மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார்.

0

 

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி மண்டல தபால் நிலையங்களில் கடந்த ஒரு வாரமாக டெபாசிட் உள்ளிட்ட பண பரிவர்த்தனைகளில் சர்வர் பிரச்சினை நீடிக்கிறது என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த சர்வர் பிரச்சினை காரணமாக மாத தொடக்கத்தில் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சுகன்யா யோஜனா மற்றும் சேமிப்பு உள்ளிட்ட கணக்குகளில் டெபாசிட் செய்ய வரும் பொதுமக்கள் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் தபால் நிலையத்திலும் இதே பிரச்சினை நீடிக்கிறது. மேற்படி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் டெபாசிட் செய்ய வரும் பொதுமக்களுக்கு அங்கு பணியில் உள்ள ஊழியர் தனிநபர் கணக்குகளில் எவ்வளவு தொகை உள்ளது என்ற விபரம் தங்களுடைய கணினியில் காட்டவில்லை என்றும், அதனால் டெபாசிட் செய்ய முடியவில்லை என டெபாசிட் செய்ய வரும் பொதுமக்களிடம் தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

தபால் நிலையம் ஊழியர்களே பொதுமக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக வந்துகணக்குகளை துவக்க கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பல லட்சக்கணக்கானோர்தபால் நிலையத்தில் கணக்குகளை துவக்கி உள்ளனர்.ஆனால் தபால்துறை தங்களுடைய அதர பழசான நெட்வொர்க்கை மேம்படுத்திக் கொள்ள முன்வருவது இல்லை என்பது வேதனை.

இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிலைதான் நாளை தபால்துறைக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஏழை எளிய மக்களின் சேமிப்பு கணக்கில் கூடுதல் அக்கறை தேவை.

எனவே திருச்சி மண்டல தபால்துறை உயர் அதிகாரிகள் இந்த சேவை குறைபாட்டை போக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
என வக்கீல்.Ra.கிஷோர்குமார் கேட்டுக் கொண்டு உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.