Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.

0

'- Advertisement -

 

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று திருச்சியில் உள்ள அன்னதான சமாஜத்தில் நடைபெற்றது.

இந்த முகாம் சேவா சங்கத்தின் போஷகர் என்.வி. முரளி தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர். ஏ.எஸ்.சுதர்சன், சௌராஷ்ட்ரா சங்கத்தின் தலைவர் பி.ஆர். B ஜனார்த்தனன ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேவா சங்கத்தின் பொருளாளர் சுரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். அலுவலக செயலாளர் C. R.அம்சராம் நன்றி உரை தெரிவித்தார்.

மாவட்ட இணைச் செயலாளர்கள் இளங்கோ, பார்த்தசாரதி ஆலோசகர்கள் முனைவர் ராஜரத்தினம், தர்மலிங்கம், மற்றும் பல சேவா சங்கத்தை கொண்ட சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை திறப்பாக நடத்தினர்.

இம்முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுமார் 60 நபர்கள் இலவச அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்றவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.