திருச்சி:ஸ்ரீ ஆதிசக்தி நாக சித்தர் பீடம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 24 ஆம் ஆண்டு மாநில அளவிலான சிலம்பம்,கராத்தே யோகா போட்டிகள் நடைபெற்றது.
திருச்சி அருகே வளநாடு கிராமத்தில் ஸ்ரீ ஆதிசக்தி நாக சித்தர் பீடம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 24ம் ஆண்டு மாநில அளவிலான சிலம்பம்,கராத்தே, யோகா போட்டிகள் நடைபெற்றது.
திருச்சி, பாண்டிச்சேரி, பழனி,மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தென் மாவட்ட தலைமை பயிற்சியாளர் ஸ்ரீ பரணி சிலம்பம்,கராத்தே, யோகா பயிற்சி கூடம் ஆசான் மதுரை பழனி போட்டிகளை சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தார்.
இப்போட்டியை அறங்காவலரான அருள்திரு மணிமாறன் சுவாமிகள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வளநாடு அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் சுப்பிரமணியன் ,கூட்டுறவு சங்கத் தலைவர் ஏடிம்.தங்கவேல் மற்றும் பல மாணவர்களும் ஆசான்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர் மாணவிகளை வாழ்த்தினார்.