திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் அண்ணா சிலை விக்டர் ஏற்பாட்டில் மாபெரும் மருத்துவ முகாம்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் அண்ணா சிலை விக்டர் ஏற்பாட்டில் மாபெரும் இலவச செவித்திறன் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ராயல் கார்ஸ் சலாவுதீன் மற்றும் ராாாா கார்ஸ் கனி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இம்முகாமில் எம்.ஆர்.எம்.
ஆடியாலஜி சென்டர் பிறவி காது கேளாண்மை,காது கேட்பதில் சிரமம்,காது இரைச்சல்,குழந்தைகள் பேசுவதில் தாமதம் மற்றும்தெளிவாக பேசாமை போன்ற பல்வேறு பரிசோதனைகளும்
மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை சார்பில் கிட்ட பார்வை, தூரப்பார்வை. கண் சிவப்பு,கண் புரை. ஒற்றைத் தலைவலி, கண்ணில் நீர் வடிதல்,கண் அரிப்பு.கண் அழுத்த நோய்,
சர்க்கரை நோயால் விழிதிரை பாதிப்பு போன்றவற்றிற்கும் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை அண்ணா சிலை விக்டருடன் இணைந்து அம்பேத்பாபு, ,தனபால், சீனிவாசன், முரளி, சேகர், தனசேகர், கண்ணன், , மணிகண்டன், கார்திக், மணிவேல் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.