30 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் சேகரிப்பு இடமாக இருந்த பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்ட அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மாநகர கழிவு நீர் சேகரிக்கும் இடமாக இருந்த பஞ்சப்பூர் மண்ணின் தரமும்,
தற்போது புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக கொட்டப்பட்டு வரும் மண்ணின் தன்மை, தரத்தை அறியும் மண் பரிசோதனை அறிக்கையை கடந்த ஓர் ஆண்டாக திருச்சி 47வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில்நாதன் கேட்டு வந்த நிலையில்,
இன்று திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் பார்வையிட்டார்.
அப்போது மணிகண்டன், தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன், இளைஞர் பாசறை செயலாளர் ஜான் கென்னடி, வட்டச் செயலாளர் நிக்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.