Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

.தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குறும்பட போட்டியில் திருச்சியில் எடுக்கப்பட்ட காகிதபூக்கள் குறும்படம் தேர்வு.

0

 

திருச்சியில் எடுக்கப்பட்ட ‘காகித பூக்கள்’ குறும்படம் மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற குளோபல் இன்டிபென்டன்ட் ப்லிம் பெஸ்டிவல் ஆப் இந்தியா தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குறும்பட போட்டியில் சிறந்த படமாக தேர்வாகி உள்ளது.

இப்படம் திருச்சி மாவட்டத்தில் காக்ரோஜ் கிரியேஷன்ஸ் கவிதா மனோகரன் தயாரிப்பில், பிரபல ஆங்கில பத்திரிகையில், புகைப்பட கலைஞராக பணியாற்றி வரும் ஆர். பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படம் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்த காலக் கட்டத்தில் பல சிறு, குறு தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வில் ஏற்பட்ட சோகம் தான் கதை. கடன் சுமைகளால் மீண்டும் தொழில் செய்ய முடியாத நிலையில், பல்வேறு தொழில் செய்த குடும்பங்கள் சிதைந்து போன உண்மை சம்பவங்களை களமாக வைத்து எடுக்கப்பட்டது தான் காகிதப் பூக்கள்.

இப்படத்தின் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு மற்றும் அனைத்து தொழில் நுட்ப பணிகளும் திருச்சியிலேயே நடைபெற்றது என்பது சிறப்பு அம்சம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் (டோனி) மற்றும் உடும்பன் பார்திபன், பள்ளி கூடம் ராம் சுரேஷ், ஹோப் தினேஷ் குமார், பாண்டி, மணிவேல் உள்ளிட்டோரும் நடிகைகள் ஆனந்தி, ஹப்சி, சத்தியாராக்கினி, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணியை கார்த்திக். ஒளிப்பதிவு உதவி மகேஷ், இசை ராம் அஸ்வத், வசனம் சுந்தர்ராஜன், டப்பிங் உதவி நவின் மற்றும் கார்த்திகா, படப்பிடிப்புக்கான உதவி ஹக்கீம், கோகுல், லோகு, அகில் உள்ளிட்டோரும் செய்தனர். படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை ஆர். பாஸ்கர், படத்தின் தயாரிப்பை கவிதா மனோகரன் செய்துள்ளனர்.

 

இப்படம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் குறும்பட போட்டியில் தேர்தெடுக்கப்பட்டு உள்ளது.இந்தப் போட்டிக்கு ஐந்து வருடங்களுக்குப் பின் திருச்சியில் இருந்து குறும்படம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், பட குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அறிவிப்பு திருச்சி மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன், என்று தெரிவித்ததுடன் மேலும், பல நல்ல படைப்புகளை எடுக்க, இது உத்வேகத்தையும், நம்பிக்கையையும் தருவதாக தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.