திருச்சி மேல அம்பிகாபுரம் இந்திரா தெருவில் உள்ளது மெர்க்குரி கம்ப்யூட்டரஸைடு டயக்னடிக் சென்டர்.
கடந்த 30 ஆண்டு காலமாக லேபரட்டரி, அல்ட்ரா ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு நவீன உபகரணங்கள் மூலம் மருத்துவ சேவை செய்து வரும் இந்நிறுவனத்தில் தற்போது புதியதாக டிஜிட்டல் எக்ஸ்ரே யூனிட் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
நிர்வாக இயக்குனர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் டாக்டர் தீனதயாளன் புதிய பிரிவை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பி.ஹெச்.இ.எல். அலுவலர்கள் சாமிநாதன், ராஜமாணிக்கம், தொழிலதிபர் மாணிக்கவாசகம் உட்பட அப்பகுதியின் முக்கிய பிரமுகர்கள், வணிக பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மெர்க்குரி டயக்னஸ்டிக் சென்டரின் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.