Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை பவர் கட். வாடி வதங்க போகும் பள்ளி குழந்தைகள். கலெக்டர், கல்வி அலுவலர் ஆகியோருக்கு மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை.

0

 

திருச்சி மக்கள் நீதி மய்யத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கண்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதியில் நாளை முழு நாள் பவர்கட்….? வாடிவதங்க போகும் பள்ளி குழந்தைகள்…..!

திருச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் கவனத்திற்கு,

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் கோடை வெப்பம் தமிழகத்தில் அதிகரித்த காரணத்தினால் பள்ளி துவங்கப்படுவது ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த தாமத்தை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளிலும் பள்ளி செயல்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நாளை [17.06.2023]ந் தேதி சனிக்கிழமை பெரும்பாலான பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி தென்னூர் மின்வாரியம் தங்களுடைய மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக திருச்சி கண்டோன்மென்ட், காஜமலை,சாத்தனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 04.00மணி வரை முழு பவர் கட் என அறிவித்துள்ளது.

மேலும் திருச்சி மின்சாரவாரியம் அறிவித்துள்ள பவர் கட் நேரம் தான், பெரும்பாலான பள்ளிகளின் வேலை நேரமும் கூட.

மேலும் நாளை திருச்சி மின்சார வாரியத்தால் மாதாந்திர பணிகளுக்காக பவர் கட் செய்யப்படும் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தான் பிலோமினால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செயின் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செயின் ஜேம்ஸ் சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி, ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி, வாசவி வித்யாலயா பள்ளி, கேம்பியன் மேல்நிலைப்பள்ளி, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட அநேக பள்ளிகள் உள்ளன.

மேலும் மேற்படி பள்ளிகளில் ஜெனரேட்டர் வசதிகள் உள்ளனவா என்று தெரியாத நிலையிலும், மேலும் ஜெனரேட்டர் வசதியிருந்தாலும் சுமார் ஏழு மணி நேரம் ஜெனரேட்டரை இயக்க முடியுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

எனவே கடுமையான இந்த வெயில் காலத்தில் பத்து நிமிடங்கள் கூட மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாத சூழலில். பள்ளி குழந்தைகளால் பல மணி நேரம் எப்படி மின்சாரம் இல்லாமல் இருக்க முடியும் என்ற இயல்பான கேள்வி எழுகிறது….?

எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி திருச்சி மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளை வேறு ஒரு தேதியில் மாற்றியமைத்தோ அல்லது மேற்படி கண்டோன்மென்ட், கஜாமலை, சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வேறு ஒரு சனிக்கிழமைகளில் பள்ளிகளில் பணிபுரியும் ஆவணங்கள் செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

என அந்த அறிக்கை கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.