திருச்சி மாநகராட்சியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை புதன்கிழமை ஒருநாள் மாநகரில் குடிநீர் வினியோகம் இருக்காது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்றும் நிலையத்திலிருந்து குடிநீா் பெறும் மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும், டா்பைன் நிலையத்திலிருந்து குடிநீா் பெறும் மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நிலையத்திலிருந்து குடிநீா் பெறும் தில்லைநகா், அண்ணாநகா், புத்தூா், காஜாபேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகா், ஆல்ஃபா நகா், பாத்திமா நகா், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும், அய்யளம்மன் படித்துறை கலெக்டா்வெல் நீரேற்றும் நிலையம் மூலம் குடிநீா் பெறும் புகழ்நகா், பாரி நகா், பழைய எல்லைக்குடி காவேரிநகா் கணேஷ்நகா், சந்தோஷ்நகா், ஆலந்தூா், கீழகல்கண்டாா் கோட்டை மற்றும் பிராட்டியூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் பெறும் ராம்ஜிநகா், பிராட்டியூா், எடமலைப்பட்டிபுதூா், விஸ்வாஸ்நகா், ஜெயாநகா் மற்றும் பிராட்டியூா் காவேரிநகா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 14) குடிநீா் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.