Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வீடியோ எடுத்த 7 சிறுவர்கள் போக்சோவில் கைது.

0

 

திருச்சியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
7 சிறுவர்கள் கைது.

திருச்சியில் 11 வயது சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர்கள் சிலர் பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய பொன்மலை மகளிர் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.