Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலம் தனியார் மருத்துவமனை நர்ஸ் காதலனுடன் ஓட்டமா?

0

 

திருச்சி அரியமங்கலம்
தனியார் மருத்துவமனை நர்ஸ் காதலன் உடன் ஓட்டம்?

திருச்சி காட்டூர் பாத்திமாபுரம் 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்.
இவரது மகள் ரம்ஜான் பேகம் (வயது 19). இவர் அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்த போது வேலைக்கு வரவில்லை என நிர்வாகத்தினர் கூறினர். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் ரம்ஜான் பேகத்தை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, ரம்ஜான் பேகம் காதல் வலையில் விழுந்தது
தெரியவந்தது. அதன் அடிப்படையில்
அவரை காட்டூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபருடன் சென்றாரா அல்லது தினேஷ் கடத்திச் சென்றாரா என சந்தேகிக்கப்படுகிறது.

அதன் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.