
எடமலைப்பட்டி புதூரில்
வாலிபர் எலி மருந்து தின்று சாவு
போலீசார் விசாரணை
திருச்சி அன்பு நகர் 11வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜானிட் (வயது 33).இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.
கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 6 மாதம் கழித்து குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை பிரிந்தார். பிறகு கடந்த 2017ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு இவர் குடிப்பழக்கத்தை விடாமல் இருந்து வந்த காரணத்தால் 2வது மனைவியும் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஜானிட் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை திருச்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஜானிட்டை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

