ஸ்ரீரங்கத்தில்
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்
சாமி தரிசனம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்
நேற்று
சாமி தரிசனம் செய்தார்.
பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வரும் டிடிவி தினகரன் நேற்று மதுரையில் நிர்வாகிகளை சந்தித்து விட்டு தஞ்சை செல்லும் வழியில் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வேண்டுகோளுக்கு இணங்க திருச்சி வருகை புரிந்தார்.

பின ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்
முதலில் கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மூலஸ்தானம் சென்ற அவர் அங்கு மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்த பின், தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர், சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் மாவட்ட தலைமை நிலைய செயலர் ராஜசேகர், தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், கல்நாயக் சதீஷ், பெஸ்ட் பாபு உட்பட பலர் இருந்தனர்.
முன்னதாக
டி.டி.வி தினகரனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் தீவிர கட்சி பணியினை வெகுவாக பாராட்டினார்.
பின்னர் அவர் கார் மூலம் தஞ்சை புறப்பட்டு சென்றார்.