Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் காணாமல் போன 241 போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸ் கமிஷனர்.

0

 

திருச்சி மாநகரில் காணாமல் போன 241 போன்கள் உரியவரிடம் கமிஷனர் சத்யப்ரியா வழங்கினார்.

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இன்று காணாமல் போன செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்
சத்யபிரியா துணை ஆணையர்கள் அன்பு மற்றும் சுரேஷ்குமார் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2022-2023 நிதியாண்டில் காணாமல் போன 169 செல்போன்களும், 2023-2024 நடப்பாண்டில் 72 செல்போன்களும் மீட்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் சத்திய பிரியா கூறுகையில் திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் தவறவிட்ட, காணாமல் போன, திருடப்பட்ட 201 செல்போன்கள் அதன் ஐஎம்இஐ நம்பரை கொண்டு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே இந்த செல்போன்களை இன்று உரிய நபர்களிடம் ஒப்படைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பொதுமக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடமைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய செல்போன்களை மேல் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும்
வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் திருச்சி மாநகர காவல் துறை தொடர்ந்து குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதற்கு பொது மக்களாகிய நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செல்போனை தவறவிட்ட அதன் உரிமையாளர்களிடம் நேரில் கலந்துரையாடி அவர்களுடைய செல்போன்களை திருப்பி வழங்கினார்.
பின்னர் போலீஸ் கமிஷனர் சத்யபிரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- செல்போன்கள் தொடர்பாக 500 வழக்குகள் நிலுவையில் உள்ளது.திருச்சி மாநகரில் போக்குவரத்து பாதிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. போலி மதுபானங்கள் விற்பனை தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு போலீஸ் கமிஷனர் சத்யபிரியா கூறினார்

Leave A Reply

Your email address will not be published.