திருச்சியில் வியாபாரியிடம் பணத்தை பறித்த இரண்டு சிறுவர்கள் கைது
திருச்சி கருமண்டபம் ஜே.ஆர். எஸ்.நகரை சேர்ந்தவர் தாமோதரன் ( வயது 48) இவர் அந்த பகுதியில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் டவுன் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது இவர் அருகில் வந்த திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் இரண்டு பேர் தாமோதரன் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 300 பணத்தை திருடிக் கொண்டு ஓட முயன்றனர்.
இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அந்த இரண்டு சிறுவர்களையும் பிடித்து திருச்சி கண்டோன்மென்ட் குற்ற பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் இரண்டு சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு திருச்சி இபி ரோட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.