திருச்சி:மருந்து சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.
அரசின் தீவிர நடவடிக்கைகளால் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது சிப்மா பெருமிதம்
மருந்துகள் சந்தை படுத்துதல் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம்
சங்கத்தின் மாநிலத் தலைவர் அருண் பிரசாத் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தினை எல்.மகாதேவன் துவக்கி வைத்து, மருந்து துறை நடைமுறையில் சந்திக்கும் சவால்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
வருங்காலம் வண்ணமயமாகும் என்ற தலைப்பில் கே.வி.முருகபாரதி பேசினார்.
கூட்டத்தில் மாநில தலைவராக ஜே. வேங்கடசுந்தரம், மாநில பொதுச் செயலாளராக எம்.ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் மருந்துகளின் விலையை உற்பத்தி செய்யும் மூலப்பொருள்களில் நிர்ணயம் செய்து இதன் மூலம் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிர்காக்கும் மருந்து துறை என்பதால் அனைத்து மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்க கூடாது.
மருந்து துறை சுயசார்பு அடைய மூலப்பொருள் உற்பத்தியை ஊக்குவித்து, வெளிநாட்டிலிருந்து வாங்கும் நிலையை தவிர்க்க வேண்டும். சிப்மா உறுப்பினர்களுக்கான
மருந்து சந்தைபடுத்ததலுக்கான தனி உரிமம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில தலைவர் பி.அருண்பிரசாந்த், மாநில பொருளாளர் எம்.பன்னீர்செல்வம், வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் பி.சரவணன், ஏ. கருணைக்கடல், சி.கோபி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கருணைக்கடல் கூறுகையில்:
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் கடுமையான நடவடிக்கைகளால் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்தியாவில் செயல்படும் சுமார் 700 மருந்து நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மருந்து உற்பத்தி மூலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன.
இதில்,
குறிப்பாக 66% சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மூலப்பொருள் இறக்குமதி
காரணமாக மருந்து விலை அதிகமாக உள்ளது.
எனவே
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் வேலைவாய்ப்பை உருவாக்க உதவவும் மற்றும் நுகர்வோருக்கு பரந்த அளவிலான மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதற்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து 15000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
இதன் மூலம் உள்நாட்டிலேயே மருந்து தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் மருந்து பொருட்கள் விலை குறையும் வாய்ப்புள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை மருந்து தயாரிப்பிற்கு மூன்று வகையான
3 வகையான உரிமங்கள் வழங்கப்படுகிறது.
அதேபோன்று
மருத்துவ உலகில் அனுபவம் பெற்ற மருந்துகள் சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும்
மருந்து உற்பத்திக்கான தனி உரிமத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.