திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தில் சார்பில் வெற்றி பாதை உயர் கல்வி மாநாட்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் வெற்றி பாதை எனும் தலைப்பில் உயர்கல்வி மாநாடு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ் மஹாலில் இன்று நடைபெற்றது.
இந்த உயர்கல்வி மாநாட்டிற்கு திருச்சி புரவலர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். கல்வி இயக்கத்தின் திருச்சி மாவட்ட பெறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
இம்மாநாட்டில் 12ம் வகுப்பு முடிந்த மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்க வேண்டிய உயர்கல்வி பிரிவுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சட்டம். இந்திய ஆட்சிப்பணி, ஆயுஷ் மருத்துவம் மற்றும் உயிரியல் ஆராய்ச்சி ஆகிய படிப்புகளை தேர்வு செய்யும் மாணவ மாணவிகளின் கல்வி காலம் முழுமைக்கான கட்டணத்தையும்
தமிழ்நாடு முஸ்லின் கல்வி இயக்கம் பொறுப்பேற்றுக் கொள்கிறது என்பதை அதன் நிறுவனர் கல்வியாலர் CMN சலீம் தெரிவித்தார்.
இம் மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.